குஜராத் மாநிலம் சோம்நாத் கோயிலில் முதலமைச்சர் பூபேந்திர படேல் சுவாமி தரிசனம் செய்தார்.
சோம்நாத் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் கோயிலுக்கு வந்த முதலமைச்சர் பூபேந்திர படேலுக்கு நிர்வாகத்தினர் சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
அதைத் தொடர்ந்து கோயிலில் உள்ள லிங்கத்திற்கு பூபேந்திர படேல் சிறப்புப் பூஜை செய்து வழிபாடு நடத்தினார் .