கன்னியாகுமரியில் நிற்காமல் சென்ற லாரியின் கதவில் தொங்கியபடி சென்று ஓட்டுநரைப் பிடிக்க முயன்ற போக்குவரத்து காவலர் படுகாயமடைந்தார்.
திருவனந்தபுரம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து காவலர் பெல்ஜின்ஜோஸ் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்.
அப்போது அவ்வழியாக லாரி ஒன்று கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. போக்குவரத்து காவலர் நிறுத்த முயன்ற போது லாரி வேகமாக இயக்கப்பட்டது.
அப்போது வாகனத்தின் கதவைப் பிடித்த பெல்ஜின்ஜோஸ் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டுத் தூக்கிவீசப்பட்டார்.இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுநர் அருள்சுந்தர் என்பவரைக் கைது செய்தனர்.