சீனாவில் நிலத்தடி குழாய் உடைந்து சாலையை நீரூற்றாக மாற்றியது.
ஜியாங்சு மாகாணத்தில் பிரபல பொழுதுப்போக்கு மையம் செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று சுற்றுலாப் பயணிகள், தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்து பொழுதைக் கழித்தனர். அதேபோன்று வழக்கம்போல் வியாபாரிகளும், ஊழியர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நிலத்துக்கு அடியில் பதிக்கப்பட்டிருந்த ராட்சத குழாய் வெடித்துச் சிதறியது. இதனால் தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. சுமார் 26 அடி உயரத்திற்கு எழுந்த தண்ணீரைக் கண்டு, அங்கிருந்த பொதுமக்களும், வியாபாரிகளும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும் ஓரிரு நிமிடங்களில் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.