மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் விலங்குநல ஆர்வலர்கள் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் தெரு நாய்களை 8 வாரங்களுக்குள் காப்பகத்தில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைக் கண்டித்து, பதாகைகளைக் கையில் ஏந்தியபடி விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம் நடத்தினர்.