மகாராஷ்டிராவில் போக்குவரத்து பெண் காவலரை 120 மீட்டர் தூரத்திற்கு ஆட்டோ ரிக்ஷா இழுத்துச் சென்ற சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா பகுதியில் போக்குவரத்து காவலரான பாக்யஸ்ரீ ஜாதவ், பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாகச் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற ஒரு ஆட்டோவை அவர் நிறுத்த முயன்றார். ஆனால் ஆட்டோ ஓட்டுநர் தேவ்ராஜ் காலே என்பவர், வாகனத்தை நிறுத்தாமல் தப்பியோட முயன்றார்.
இதையடுத்து, போக்குவரத்து காவலர் பாக்யஸ்ரீ, ஆட்டோவை பிடித்துக் கொண்டு ஓடினார். ஒரு கட்டத்தில் அவர் கீழே விழுந்தப்படி 120 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டார்.
இதனைக் கண்ட மக்கள், ஆட்டோவை விரட்டி பிடித்து, போக்குவரத்து பெண் காவலரைப் பத்திரமாக மீட்டனர். மேலும் மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநரையும் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.