திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.
பொன்னேரி நகராட்சி சார்பில் ஆரணி ஆற்றில் சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பணிகளைத் தடுத்து நிறுத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குக் குவிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அழைத்துச் சென்றதுடன் பணிகளைச் செய்வதற்குப் பாதுகாப்பு வழங்கினர்.