திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆன்லைன் தரிசன வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூருக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர்.
கோயிலில், கட்டண வரிசை, பொது தரிசனம் என 3 வழிகளில் பக்தர்கள், தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளுக்கு நாள் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆன்லைன் தரிசன வசதியை நடைமுறைப்படுத்த வேண்டுமெனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.