குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்குத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமோக ஆதரவு எழுந்துள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, NDA வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்தார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதற்குக் கூட்டணி எம்.பிக்கள் அமோக ஆதரவளித்தது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.