இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, டெல்லியில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி வந்துள்ள சீன அமைச்சர் வாங் யீ, நேற்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார்.
அதன்பிறகு இன்று டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் அஜித் தோவல் உடனான சந்திப்பு நடைபெற்றது. இருவருக்குமான சந்திப்பு இந்திய – சீன உறவுகளை வலுப்படுத்த முக்கியம் வாய்ந்தது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.