கொடைக்கானல் புலவிசாறு அருவிக்கு, ஆபத்தை உணராமல் ரீல்ஸ் மோகத்தில் ஆழமான பள்ளத்தாக்கு பகுதியை கடந்து செல்லும் இளைஞர்களின் வீடியோ வைரலாகியுள்ளது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை எழில் கொஞ்சும் மலைமுகடுகளையும், அருவிகளையும் காண்பதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இளைஞர்களில் சிலர் ரீல்ஸ் மோகத்தில் ஆபத்து நிறைந்த நீர்வீழ்ச்சிகளைக் காண்பதற்காக போதிய வழித்தடம் இல்லாத மலை முகடுகளிலும், சறுக்கல் நிறைந்த செங்குத்துப் பாறைகளிலும் ஆபத்தை உணராமல் சென்று வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
ரீல்ஸ் மோகத்தில் புலவிசாறு அருவியின் தரை பகுதிக்குச் செல்ல ஆபத்தை உணராமல் ஆழமான பள்ளத்தாக்கு, அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதி வழியாக செல்கின்றனர்.
அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பே வனத்துறையும், காவல்துறையும் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதோடு, சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.