பூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம் : ஹார்வர்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம் : ஹார்வர்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Murugesan M by Murugesan M
Aug 20, 2025, 09:05 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வேற்றுக்கிரக விண்கலம் ஒன்று விரைவில் பூமியை நெருங்கக்கூடும் என ஹார்வர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது சாத்தியம் தானா? இயல்பிலிருந்து மாறுபட்ட இந்த நம்பிக்கைக்கு என்ன காரணம்? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…

பிரம்மாண்டமான விண்வெளி எப்போதும் நமது கற்பனைகளுக்கு விருந்தளிக்கக் கூடியதே. இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தனியாக இருக்கிறோமா என்ற கேள்வி, பல நூற்றாண்டுகளாகத் தத்துவவாதிகளையும், விஞ்ஞானிகளையும் வேற்று கிரக வாசிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளத் தூண்டி வருகின்றன. இந்த சூழலில், பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கும் ஒரு மர்மப் பொருள் வேற்று கிரகவாசிகள் தொடர்பான விவாதங்களை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளன.

இந்நிலையில், பூமியை நோக்கி மிகுந்த வேகத்தில் வந்துகொண்டிருக்கும் அந்த மர்மப் பொருளை வைத்து, அது வேற்று கிரக வாசிகளின் விண்கலமாக இருக்கலாம் என ஹார்வேர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அமெரிக்காவின் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் நிபுணர் அவி லோப் தலைமையிலான 3 விஞ்ஞானிகள், இது தொடர்பான ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

“31/ATLAS” என்று அழைக்கப்படும் இந்த மர்மப் பொருள், வேற்று கிரக வாசிகளின் ET விண்கலமாக இருக்கலாம் என்றும், அது பூமியை நோக்கி புலனாய்வு சோதனைகளை மேற்கொள்ளும் ஆய்வு கலன்களை அனுப்ப வாய்ப்பு இருப்பதாகவும் வானியலாளர்கள் கணித்துள்ளனர்.

12 மைல் அகலம் கொண்டதாக அளவிடப்பட்டுள்ள இந்த மர்மப் பொருள்,  மணிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் மைல் வேகத்தில் சூரியக் குடும்பத்தைக் கடந்து வந்துகொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வரும் டிசம்பர் 19-ம் தேதி இந்த மர்மப் பொருள் பூமியில் இருந்து 1.7 கோடி மைல் தொலைவில் செல்லும் என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். சாதாரண விண்கல்லைக் காட்டிலும் இந்த மர்மப் பொருள் மிகப் பெரியதாக இருப்பதும், சூரியக் குடும்பத்தினுள் அதி வேகமாக நுழைந்த முதல் பொருள் இது என்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக ஆய்வுக் கட்டுரையில் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆய்வு கலன்களை அனுப்பச் சரியான பாதையாகக் கருதப்படும் விண்மீன் மண்டல மையப்பகுதியில் இருந்து, இந்த மர்மப் பொருள் சூரியக் குடும்பத்தினுள் நுழைந்திருப்பதும் விஞ்ஞானிகளின் சந்தேகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த பாதையில் பயணிப்பதால் இது அவ்வப்போது சூரியனால் மறைக்கப்படும் என்பதால், இந்த மர்மப் பொருளை வெறும் கண்ணால் காண இயலாது என்றும் ஆய்வுக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இந்த மர்மப் பொருள் வெள்ளி, செவ்வாய், வியாழன் ஆகிய கிரகங்களுக்கு அருகில் செல்லும் பாதையும், திட்டமிடப்பட்ட MAPPING MISSION போன்று தெரிவதாகக் குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், இயற்கையாக இப்படி நடப்பதற்குச் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்பதையும் விவரித்துள்ளனர்.

இந்த மர்மப் பொருள் பூமிக்கு அருகில் வரும் டிசம்பர் 19-ம் தேதியும் அது சூரியனால் மறைக்கப்படும் என்பதால், அதனைப் பூமியில் இருந்து வெறும் கண்ணால் காண இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரிட்டிஷ் பாதுகாப்புத்துறை ஆய்வாளரான நிக் போப்பும், ஹார்வேர்டு விஞ்ஞானிகளின் கூற்று உண்மையாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். பிற விஞ்ஞானிகள் இதனை வெறும் விண்கல்லாக இருக்கும் என விவாதிப்பதையும் மறுப்பதற்கில்லை. எது எப்படியோ பூமியை நோக்கி வருவது வேற்று கிரக விண்கலமா அல்லது விண்கல்லா என்பதைக் காலம் தெளிவுபடுத்தும் என நம்புவோம்.

Tags: Harvard scientists reveal shocking information about alien spacecraft approaching Earthபூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம்ஹார்வர்டு விஞ்ஞானிகள்
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

Next Post

ரீல்ஸ் மோகத்தில் ஆழமான பள்ளத்தாக்கு பகுதிக்கு செல்லும் இளைஞர்கள்!

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies