அமெரிக்காவுக்கு "செக்" : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு - இந்திய-சீன உறவில் திருப்பம்!
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

Murugesan M by Murugesan M
Aug 19, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.  எல்லை பிரச்சனைகளைத் தீர்ப்பது மட்டுமல்லாமல் – இருதரப்பு நம்பிக்கையை வளர்ப்பதும்  மற்றும் எதிர்கால நல்லுறவுக்கான வரைபடத்தை அமைப்பது ஆகிய செயல்திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாசலப் பிரதேசம்,அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளில் சீனாவுடன்  3,488 கிலோமீட்டர் நீளமுள்ள எல்லையை இந்தியா பகிர்ந்து கொள்கிறது.  1996 மற்றும் 2005-ம் ஆண்டுகளில், இருநாடுகளும் எல்லை பிரச்சனை தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.

2017-ம் ஆண்டு, இந்திய-பூட்டான் எல்லையில் அத்துமீறி சாலை போட முயற்சி செய்த சீனாவின் நடவடிக்கையை  ( Operation Juniper ) ஆப்ரேஷன் ஜூனிபர் மூலம் இந்திய ராணுவம் முறியடித்தது.

2020ம் ஆண்டு,  கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில்  ஒப்பந்தத்தை மீறி சீனா அத்துமீறி முகாம் அமைத்தது. மீண்டும் எல்லை பதற்றம் அதிகரித்தது. பலதரப்பட்ட நிலைகளில் பேச்சுவார்த்தை நடைபெறத் தொடங்கின.

கடந்த அக்டோபரில், ரஷ்யாவின் கசானில் நடந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியும்  சீன அதிபர் ஜி ஜின்பிங்க்கும் சந்தித்தனர். தொடர்ந்து, இருதரப்பு உறவுகள் மீண்டும் துளிர் விட ஆரம்பித்தது.

2005ம் ஆண்டில் இரு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட அரசியல் வழிகாட்டுதல்களின்படி, எல்லைப் பிரச்சினைக்கு நியாயமான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை அடைவதற்கான தங்கள் உறுதிப்பாட்டைத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ  ஏற்கெனவே உறுதிப் படுத்தி இருந்தார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதத்தில், சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி- யைச் சந்தித்துப் பேசிய  தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்,  அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை பேணுவதற்கு, அனைத்து  வகையான பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.

கல்வான் மோதலுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசிய பின், அஜித் தோவலுடனும் ஆலோசனை செய்துள்ளார்.

சிறப்புப் பிரதிநிதி அளவிலான 24வது சுற்று விவாதங்களின் ஒரு பகுதியாக நடந்த இந்தப் பேச்சுவார்த்தைகளில்  ஸ்திரத் தன்மையை நிலைநிறுத்துவது மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும்  விவாதிக்கப்பட்டுள்ளன.

எல்லையில் மேம்பட்டு வரும் சூழ்நிலையையும் எடுத்துரைத்த அஜித் தோவல், எல்லையில் அமைதி நிலவுவதாகத் தெரிவித்துள்ளார். பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள், புனித யாத்திரைகள் மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் முதல் நதி தரவுகள் பகிர்வு, எல்லை வர்த்தகம் மற்றும் இணைப்பு வரையிலான பிரச்சினைகள் குறித்து தீர்க்கமான முடிவுகள் எட்டுவதற்கான வழிவகை பற்றி விவாதித்ததாக வாங் யீ  தெரிவித்துள்ளார்.

வரும் 30 ஆம் தேதி, நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு  உச்சி மாநாட்டுக்காகப்  பிரதமர்  மோடி  சீன வருகையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய வாங் யீ , அடிப்படை மற்றும் நீண்டகால நலன்களுக்குச் சேவை செய்யும் வகையில் இந்திய-சீன உறவு உள்ளது என்பதை வரலாறும் யதார்த்தமும் நிரூபிக்கின்றன என்று கூறியுள்ளார்.

ஒருமித்த கருத்தை உருவாக்கவும், அடுத்த எல்லை ஆலோசனைகளுக்கான குறிப்பிட்ட இலக்குகளை அடையாளம் காணவும்,  இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்கவும் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக வாங் யீ தெரிவித்துள்ளார்.

மேலும், இருநாட்டுத் தலைவர்களின்   வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் பரஸ்பர நம்பிக்கையை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும், பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பு மூலம் பொதுவான நலன்களை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியுள்ளார்.

கடந்த கால பின்னடைவுகள் யாருடைய நலன்களுக்கும் பலனளிக்காது என்று உண்மையை உணர்ந்து கொண்டதாகக் கூறிய வாங் யீ, எல்லைகளில் இப்போது மீட்டெடுக்கப்பட்ட அமைதி இருதரப்பினருக்கும் மகிழ்ச்சி தருவதாகத் தெரிவித்துள்ளார்.

இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்க இந்தியாவுடன்  இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக வாங் யீ உறுதியளித்துள்ளார்.  இந்த பேச்சுவார்த்தைகள் இருதரப்பு உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உறுதிப்பாட்டை  வெளிப்படுத்தியுள்ளன.

அதன் அறிகுறியாக, உரங்கள்,அரிய வகை தாதுக்கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களுக்கான இந்தியாவுக்கான இறக்குமதி தடையைச் சீனா நீக்கியுள்ளது.

Tags: அஜித் தோவல்china news today"Check" for America: Ajit Doval-Wang Yi meeting - a turning point in India-China relationsஅமெரிக்காவுக்கு "செக்"அஜித் தோவல் -வாங் யீ சந்திப்புஇந்திய-சீன உறவில் திருப்பம்
Share
Tweet
SendShare
Previous Post

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

Next Post

பூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம் : ஹார்வர்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies