மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!
Sep 12, 2026, 11:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

Murugesan M by Murugesan M
Aug 19, 2025, 08:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் குற்றச்சாட்டுகளுக்குத் தேர்தல் ஆணையர்கள் உரிய விளக்கமளித்திருக்கும் நிலையில், தனது பங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஏழு கேள்விகளை எழுப்பியிருந்தார். முதலமைச்சர் எழுப்பிய கேள்விகளையும், அதற்குத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் அளித்திருக்கும் பதிலையும் தற்போது பார்க்கலாம்.

1.  வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும் எப்படி தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர் எனத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, கணக்கெடுப்பின் போது தவறு நடந்திருந்தால் அதனைச் சுட்டிக்காட்டத் தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கிய போது அமைதியாக இருந்துவிட்டு தற்போது திடீரென குற்றம் சாட்டுவது ஏன் எனத்  தேர்தல் ஆணைய அதிகாரிகள்  பதில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

2. இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டார்களா ? எனவும் 18 வயது நிறைந்த இளம் வாக்காளர்கள் எத்தனை பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற தரவுகள் இருக்கிறதா? எனக் கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு, ஒவ்வொரு முறையும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் போதும் வயது வாரியாக புதிய வாக்காளர் விவரம் வெளியிடப்படுவதோடு, அது தொடர்பான முழு விவரங்களும் அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்படுவது குறித்து முதல்வருக்குத் தெரியாதா ? எனத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்

3.  வாக்காளர் பதிவுச் சட்டம் 1960ன் கீழ் கொடுக்கப்பட்ட விசாரணைக்கான காலவரைமுறையால் பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்கள் நீக்கும் வாய்ப்பு உள்ளதைத் தேர்தல் ஆணையம் எப்படித் தீர்க்கப்போகிறது என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர் கூறுவது போல எந்தவித புகாரும் இதுவரை வரவில்லை எனத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

4.  பிற மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளும் போது ஏற்படும்  நடைமுறைச் சிக்கலைத் தேர்தல் ஆணையம் கணக்கில் கொள்ளுமா என மு.க.ஸ்டாலின் எழுப்பியிருக்கும் கேள்விக்கு, எந்த குறையாக இருந்தாலும் தேர்தல் ஆணையம் கவனத்திற்கு ஆதாரத்துடன் கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

5. கடந்த மே 1 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பின் படி, மறைந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் திமுக முறையிட்டதற்கான நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்ற முதலமைச்சரின் கேள்விக்கு, பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களை நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நீங்கள், தற்போது மீண்டும் அதையே செய்யச் சொல்வது குழப்பத்தை ஏற்படுத்தாதா ? எனவும் பதில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

6.  வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதார் அட்டையை ஏற்கத் தேர்தல் கமிசனை தடுப்பது எது? என்ற மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு, ஆதார் அட்டையை 12 வாக்காளர் அடையாள ஆவணங்களில் ஒன்றாகப் பயன்படுத்தலாம் என்பதில் தேர்தல் ஆணையம் இதுவரை எவ்வித மாற்றமும் கொண்டுவரவில்லை என்பதால் இந்த கேள்வியே தேவையற்றது எனப் பதில் அளித்துள்ளனர்.

7.  நியாயமான தேர்தல்கள் என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்கு என்றால் அதனை வெளிப்படைத் தன்மையுடன் நடத்தலாமே என்ற மு.க.ஸ்டாலினின் கேள்விக்கு, அனைத்து கட்சி முகவர்களின் ஒப்புதலுடன் தான் தேர்தல் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படுவதாகவும், அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படைத் தன்மையுடன் தான் நடைபெறுவதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

Tags: தேர்தல் ஆணையம்mk stalin news todayMK Stalin vs Election Commissionமு.க.ஸ்டாலின்
Share
Tweet
SendShare
Previous Post

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Next Post

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies