திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில் தண்ணீர் தேடி வந்த இடத்தில் இரும்பு கதவின் இடுக்கில் சிக்கித் தவித்த ஆண் புள்ளிமான் பத்திரமாக மீட்கப்பட்டது.
அங்குள்ள பஜார் வீதிக்குத் தண்ணீர் தேடி வழி தவறி வந்த புள்ளி மான், பொதுமக்களின் கூட்டத்தைக் கண்டு அஞ்சி ஓடியபோது, இரும்பு கதவின் இடுக்கில் சிக்கியது.
தொடர்ந்து புள்ளி மானை பாதுகாப்பாக மீட்ட பொதுமக்கள் அதுகுறித்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடம் வந்த வனத்துறையினர் மானை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.