மதுரையில் தவெக மாநாட்டிற்கு விஜயகாந்த் புகைப்படத்தைப் பயன்படுத்தி அக்கட்சி நிர்வாகிகள் பேனர் அடித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி பகுதியில் நாளை தவெக மாநாடு நடைபெறவுள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாநாட்டிற்காக விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தி தவெக நிர்வாகிகள் பேனர் வைத்துள்ளனர்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தங்களின் அனுமதியின்றி கட்சி நிகழ்வுகளுக்கு விஜயகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ள நிலையில், தவெக நிர்வாகிகளின் இந்த செயல் பேசுபொருளாகியுள்ளது.