திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் மட்டம் இயல்பைவிட 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஏரிகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக வரண்டு காணப்பட்ட இந்த நீர் நிலைகளால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து மக்களைக் கவலையில் ஆழ்த்தியது.
இந்நிலையில், அண்மையில் பெய்த தொடர் மழையால் அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, விவசாய பாசனத்திற்கும் பற்றாக்குறை ஏற்படாது என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.