கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றின் பாலத்தில் இளைஞர் ஒருவர் தடுப்புச் சுவரில் ஏறி நின்று அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்புச் சுவரில் ஏறி நின்று அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர் குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
அப்போது அவ்வழியாகச் சென்ற தீயணைப்புத் துறை வீரர் ஒருவர் பாலத்தின் தடுப்புச் சுவரில் ஏறி நின்ற இளைஞரை பிடிக்க முயன்றார்.
அப்போது அவர் தீயணைப்புத் துறை வீரரின் பிடியில் சிக்காமல், ஆற்றில் குதித்து நீந்தி அருகிலிருந்த கரையில் ஏறித் தப்பிச் சென்றார். பின்னர் சம்பவ இடம் வந்த போலீசார் அந்த இளைஞர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.