பாகிஸ்தான் விமானப்படைத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக நவாஸ் ஷெரீப்பின் உதவியாளர் நஜாம் சேதி ஒப்புக்கொண்டுள்ளார்.
மே 7-ம் தேதி ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை ஏவுகணைகளை வீசி அழித்தது. அப்போது தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே அதிதீவிரமான போர் நடைபெற்றது. இதையடுத்து, மே 9-ம் தேதி நள்ளிரவில் பாகிஸ்தானின் 11 விமானப் படைத் தளங்களை இந்திய விமானப் படை, பிரம்மோஸ், ஸ்கால்ப் ஏவுகணைகள் மூலம் அழித்தன.
ஆனால், இதனைப் பாகிஸ்தான் ராணுவமும், அரசும் மறுத்து வந்த நிலையில், பஞ்சாப் மாகாணத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உதவியாளருமான நஜாம் சேதி, மாறுபட்ட கருத்தினை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் விமானப்படைத் தளங்கள் மற்றும் தீவிரவாதிகள் முகாம்களை, துல்லிய தாக்குதல் நடத்தி, இந்திய விமானப்படை அழித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.