தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்
Mar 15, 2026, 11:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Aug 20, 2025, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி 285-இன் படி, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, கடந்த சில தினங்களாக சென்னை, கடலூர், திருநெல்வேலி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தூய்மைப்பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களைத் தொடர்ந்து போராடவிட்டால் அது திமுகவிற்கு எதிரான பெரும் மக்கள் புரட்சியாக உருவெடுக்கும் என்பதை உணர்ந்த திமுக அரசின்  தலைவர்கள் கொஞ்சம் கூட கருணையின்றி அம்மக்களை அடித்து விரட்டுகிறார்கள்.

வலுக்கட்டாயமாகக் கைது செய்து அவர்களை சிறையில் அடைக்கிறார்கள். போராட்டக்காரர்களுக்கு உதவும் சமூக ஆர்வலர்களையும் சிறைக்காவலில் தாக்கித் துன்புறுத்துகிறார்கள். உழைக்கும் வர்க்கத்தினை இவ்வாறு ஒடுக்குவது தான் திமுகவின் சமூகநீதி மாடலா? ஒவ்வொரு தேர்தலின் போதும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ள உழைக்கும் வர்க்கத்தினருக்கு ஆயிரம் ஆசை வார்த்தைகளைக் கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களைத் திட்டமிட்டு இப்படி ஏமாற்றுவதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு மனது உறுத்தவில்லையா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தனது ஆட்சியின் இறுதி காலங்களிலாவது தூய்மைப் பணியாளர்களின் துயரங்களைத் துடைத்து அம்மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதை விட்டுவிட்டு, மென்மேலும் அம்மக்களை வதைக்கும் திமுகவின் அகங்காரம் உண்மையிலேயே வெட்கக்கேடு.

எனவே, திமுகவால் வஞ்சிக்கப்பட்ட தமிழகத் தூய்மைப் பணியாளர்களுக்கு பக்க பலமாக என்றும் களத்தில் பாஜக நிற்கும் என்பதையும், இந்த அராஜக அரசின் மீதான மக்களின் கடுங்கோபத்தையும், ஆற்றாமையையும் அடக்குமுறைகளால் அணைத்துவிட முயன்றால் அது பேராபத்தில் சென்று முடியும் என்பதை முதல்வருக்கு  நயினார் நாகேந்திரன் தெளிவுபடுத்தி உள்ளார்.

Tags: tn bjpதமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்Tamil Nadu is burning due to the continuous protests of sanitation workers: Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

Next Post

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

Related News

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies