திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமிக்கு நகை அலங்காரம் செய்வதில் சிவாச்சாரியார்கள், திரிசுதந்திரர்கள் இடையேயான மோதலால் சுவாமி புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ஆவணித் திருவிழா கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
12 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் விழாவின், 7 ஆம் நாளில் சண்முகருக்கு உருகு சட்ட சேவை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு நகை அலங்காரம் செய்வதில் கோயில் சிவாச்சாரியார்கள் மற்றும் திரிசுதந்திரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் சுவாமி புறப்பாட்டில் தாமதம் ஏற்பட்டதால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.