ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் லீவிட், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் டிரம்ப் மிகப்பெரிய பொது அழுத்தத்தைக் கொடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீதான இரண்டாம் நிலை வரிகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததாகவும் கூறினார்.
மேலும், பாதுகாப்பு உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு அமெரிக்கத் துருப்புக்களை அனுப்புவது நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், உக்ரைன் – ரஷ்யா போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் விரும்புகிறார் எனவும் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.