மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உருவப்படத்திற்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசன் உடல் நலக்குறைவால் கடந்த 15 ஆம் தேதி காலமானார். இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்ற பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, இல.கணேசன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து இல.கணேசன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார்.