தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க திமுகவுக்குத் தயக்கம் ஏன்? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க திமுகவுக்குத் தயக்கம் ஏன்? என்று தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
வரலாற்றுப் பிழை இழைக்கும் திமுகவைத் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் திமுக மீண்டும் ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்கிறது எனக் அவர் ககூறினார்.
பாஜகவிற்கு நாங்கள் வர ஆர்எஸ்எஸ் தான் முக்கிய காரணம் என்றும் திமுக தமிழர் பற்று, தமிழர் உரிமை எனப் பேசுவது நாக்கிற்காகவும், வாக்கிற்காகவும் மட்டுமே என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.