உத்தரப் பிரதேசத்தில் மாநிலம் காசியாபாத்தில் குடியிருப்பு ஒன்றில் பணிப்பெண்ணை வளர்ப்பு நாய் கடித்துக் குதறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
காசியாபாத்தின் அம்ரபாலி பகுதியில் உள்ள குடியிருப்பில் இளைஞர் ஒருவர் வளர்க்கும் நாய் ஒன்று லிப்டின் அருகே நின்ற பணிப்பெண்ணைக் கடித்துக் குதறியது.
இருப்பினும் அந்த இளைஞர் அந்த பெண்ணிற்கு எந்தவொரு உதவியும் வழங்காமல் லிப்டில் நாயுடன் சென்றுள்ளார். நாய்கடித்ததில் பாதிக்கப்பட்ட பணிப்பெண் அழுதவாறு லிப்டில் சென்ற காட்சிகள் வெளியாகி உள்ளது. நாய்கடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.