சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தி.நகரில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது கருத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் மாநில அளவில் பல முக்கிய பொறுப்புகள் வகித்தவர் என்றும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு திமுக ஆதரவளிக்க வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா அனைவருக்கும் பொதுவானது என்றும் சிறை செல்லும் அமைச்சர்களுக்கு புதிய சட்ட மசோதா அவசியம் என்றும் மாநாடு நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது என்று அண்ணாமலை கூறினார்.