டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்திய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நபரை காவல்துறை கைது செய்தனர்.
டெல்லியில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரேகா குப்தா மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து கொண்டிருந்தார்.
அப்போது கூட்டத்தில் புகுந்த நபர் ஒருவர் முதலமைச்சர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தினார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து தாக்குதல் நடத்திய குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நபரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.