உத்தரப் பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
நேபாள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநில அரசு இடித்து அகற்றி வருகிறது.
அந்த வகையில் ஷ்ரவஸ்தி, பஹ்ரைச், சித்தார்த் நகர், லக்கிம்பூர் கெரி ஆகிய மாவட்டங்களில் இந்த நடவடிக்கை தொடர்கிறது.
இந்நிலையில் ஷரவஸ்தி மாவட்டத்தில் பிங்கா ஈத்கா முதல் தெஹ்ஸில் திராஹா வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 25 கடைகள், வீடுகள் உள்ளிட்ட ஜேசிபிகள் கொண்டு இடித்து அகற்றப்பட்டது.