தூய்மை பணிகளைத் தனியாருக்கு வழங்கும் வகையில் சென்னை மாநகராட்சி நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள இரண்டு மண்டலங்களில் தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளைத் தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்டார்.