மூன்றாயிரம் கிலோமீட்டர் தூரம் தாக்கக்கூடிய புதிய Flamingo ஏவுகணையை உக்ரைன் தயாரித்து வருகிறது.
இந்த ஏவுகணை, பிட்டனின் MilanionGroup உருவாக்கிய FP-5 ஏவுகணையை ஒத்ததாகவும், அதே தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் உக்ரைனின் FirePoint பாதுகாப்பு நிறுவனத்தில் எடுத்த புகைப்படங்கள் மூலம் Flamingo ஏவுகணையின் உருவம் உலகிற்குத் தெரியவந்தது.
இந்த ஏவுகணை மூன்றாயிரம் கிலோ மீட்டர் ரேஞ்ச், ஆயிரம் கிலோ வெடிகுண்டு, 6 மீட்டர் இறக்கைகள், மணிக்கு 900 கிலோ மீட்டர் வேகம், செயற்கைக்கோள் nevigation அமைப்பு போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.
இதற்கு முன், உக்ரைன் அதன் Neptune ஏவுகணை மூலம் ரஷ்யாவின் Moskva கப்பலை அழித்துள்ளது. அதேபோல் உக்ரைனின் Hrim-2 ஏவுகணை 500 கிலோ மீட்டர் தூரம் வரை தாக்கக்கூடியது.
ஆனால், இந்த Flamingo ஏவுகணை இவை அனைத்தையும் மிஞ்சும் திறனுடன் உக்ரைனின் ராணுவ சக்தியைப் பலப்படுத்துகிறது.