குற்றச்செயல்களில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யும் வகையிலான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா 3 மசோதாக்களை முன்மொழிந்தார். அரசியலமைப்பு 130 ஆவது திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்களின் அரசு திருத்த மசோதா மற்றும் ஜம்மு – காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதாக்களை தாக்கல் செய்தார்.
இதில் அரசியலமைப்பு திருத்த மசோதா, கடுமையான குற்றச்செயல்களில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கிறது. இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றிக் கொண்டிருந்தபோது மசோதா நகலை கிழித்தெறிந்ததால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது.