AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்
Oct 7, 2025, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

Web Desk by Web Desk
Aug 20, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

AI மூலம் மக்களை ஏமாற்றும் அறிவாலய அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்

சாலையில் ஆபத்தான முறையில் கிடக்கும் மின்சார கேபிள்கள் பற்றி புகைப்படத்துடன் புகாரளித்தால், அவற்றை அப்புறப்படுத்தாமல், புகைப்படத்திலுள்ள வாகனங்களை மட்டும் Al உதவியுடன் அகற்றிவிட்டு, பிரச்சனை சரி செய்யப்பட்டதாக பெருநகர சென்னை மாநகராட்சி பதிவிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

உயிரையே பறிக்கவல்ல மின்சார கேபிள்களைப் பற்றிய தகவல் அறிந்ததும் அதனை அகற்றுவதைவிட்டு புகைப்படங்களை எடிட் செய்வதில் மட்டும் அக்கறை காட்டியிருப்பது மக்கள் நலனில் திமுக அரசு கொண்டுள்ள அலட்சியப்போக்கையே சுட்டிக் காட்டுகிறது.

மக்களை ஏமாற்றி உயிருடன் விளையாடுவது தான் திராவிட மாடலா? இந்த முறை AI தொழில்நுட்பம் தவறு செய்ததால் மட்டுமே திமுக அரசின் தவறு வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவின் துணையுடன் இதுவரை எத்தனை புகார்கள் களையப்பட்டது போல புனையப்பட்டன? எத்தனை தவறுகள் மறைக்கப்பட்டன? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மனதில் எழுகின்றன.

ஒருபுறம் பணிகளைத் துறந்து விளம்பரங்களில் மட்டும் ஆர்வம் காட்டும் முதல்வர் ஸ்டாலின், மறுபுறம் புகாரைச் சரிசெய்வதை விடுத்து, புகைப்படங்களை மட்டும் மாற்றும் சென்னை மாநகராட்சி நிர்வாகம். இது தான் நாடு போற்றும் நல்லாட்சியா? எளியோரை எள்ளிநகையாடி, AI உதவியுடன் ஏமாற்றி, மீண்டுமொரு முறை கோட்டையில் கொடியை ஏற்றலாம் என்ற எண்ணத்துடன் உழன்று வரும் திமுக அரசு அரசு, பகல் கனவு களைந்து ஏமாற்றமடைந்து, தமிழகத்தில் இருந்து தூக்கியெறியப்படும் நாள் வெகு தொலைவிலில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags: MK Stalintn bjpNayanar Nagendran.news dmkThe day when the government will deceive the people through AI is not far off: Nainar Nagendran
ShareTweetSendShare
Previous Post

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

Next Post

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

Related News

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

திருச்சியில் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies