முன்னாள் பிரதமர் தேவகவுடாவை, ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்தார்.
டெல்லியில் உள்ள தேவகவுடாவின் இல்லத்திற்கு சி.பி.ராதாகிருஷ்ணன் சென்றார். அப்போது பூங்கொத்து கொடுத்தும், சாலை அணிவித்தும் தேவகவுடாவிடம் வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து இருவரும் அமர்ந்து கலந்துரையாடினர்.