தென்காசியில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் மாநில தலைவர், மாவட்ட தலைவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
குத்துக்கல்வலசையில் உள்ள தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில், இளைஞர் காங்கிரஸ் ஊழியர் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூரிய பிரகாஷ் மற்றும் பொறுப்பாளர் சாகரிகாராவ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தன்னிடம் கூறாமல் கூட்டம் நடத்தியது ஏன் எனக்கூறி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன், சூரிய பிரகாஷ்-இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தன்னை சாதி ரீதியாக ஒதுக்குவதாகவும் குற்றஞ்சாட்டினார். இதனால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.