வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் புகார்கள் அதிகரித்த நிலையில், புதிய உத்தரவுகளை சென்னை மாநகராட்சி பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆக்ரோஷமான நாய்களை வளர்க்கக் கூடாதென, நாய்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளுக்கு மாநகராட்சியின் உரிமம் அவசியம் என்றும், வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும்,
வளர்ப்பு நாய்களை பொதுஇடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது சங்கிலி, கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமூடி இன்றி நாய்களை சுதந்திரமாக உலவ விட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் ஒரு செல்லப்பிராணியை மட்டுமே வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ள சென்னை மாநகராட்சி,
விதிகளை மீறும் உரிமையாளர்கள் மீது இந்தியப் பிராணிகள் நலவாரிய வழிகாட்டுதலின்படி குற்றவியல் நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்துள்ளது.