குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து திமுகவினர் அவதூறு பரப்ப வேண்டாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதியில் மக்கள் மத்தியில் பேசிவர்,
சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உயர்ந்த பதவி கிடைக்க உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சி.பி.ஆர் அறிவிக்கப்பட்டது தமிழர்களுக்குப் பெருமை என்றும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் அவதூறு பரப்ப வேண்டாம் என்று இபிஎஸ் கூறினார்.
மேலும் சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து கனிமொழி பேசியதற்கு இபிஎஸ் கண்டனம் தெரிவித்தார்.