இந்தியா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மிகப்பெரிய முட்டாள்தனம் எனப் பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், 50 சதவீதம் வரி விதித்தார்.
டிரம்பின் இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்கப் பொருளாதார நிபுணரும் கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியருமான ஜெஃப்ரி சாக்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், இந்தியா மீதான 50 சதவீத வரி உத்தி அல்ல, நாசவேலை என சாடினார். உலகளாவிய கூட்டணிகள் ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் நேரத்தில், அமெரிக்காவின் வரிகள் தன்னைத்தானே தோற்கடித்துக் கொள்வதாகவும், ஆசியாவில் அமெரிக்காவின் மிக முக்கியமான உறவுகளில் ஒன்றை சேதப்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் டிரம்பின் வரிவிதிப்பு மிகப்பெரிய முட்டாள்தனமான நடவடிக்கை எனவும் ஜெஃப்ரி சாக்ஸ் விமர்சித்தார்.