திருப்பத்தூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான 600 கிலோ குட்கா போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பொம்மிகுப்பம் ஊராட்சி ஏழருவி பகுதியில் மளிகைக் கடை நடத்தி வரும் பழனி என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்குப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ குட்கா போதைப்பொருளைப் பறிமுதல் செய்த போலீசார், இதில் தொடர்புடைய 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.