ஓசூரில் கூலித் தொழிலாளியைக் கர்நாடக இளைஞர் கத்திரிக்கோலால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நார்ப்பனட்டி பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரின் வளர்ப்பு நாய், முனியேந்திரன் என்ற இளைஞரை கடிக்க முயன்றதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், கோபால் வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் முனியேந்திரன் கத்திரிக்கோலால் குத்தியதில் கோபால் படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.