யூத் ஏசியன் கை மல்யுத்த போட்டியில் வெற்றி பெற்று பாரா யூத் ஏசியன் போட்டியில் பங்கேற்கத் தேர்வாகிய தமிழக வீரர்களுக்குச் சேலம் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான யூத் ஏசியன் செலக்சன் கை மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில், சேலத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, தஞ்சாவூரைச் சேர்ந்த ஞானவதி, சென்னையைச் சேர்ந்த ரத்னேஷ் ஆகியோர் வெற்றி பெற்று பாரா போட்டிக்குத் தேர்வாகி உள்ளனர்.
டிசம்பரில் துபாயில் நடைபெறும் பாரா யூத் ஏசியன் போட்டியில் 3 பேரும் பங்கேற்க உள்ள நிலையில் தங்களுக்குத் தமிழக அரசு உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.