காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.
2023-ம் ஆண்டு ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேலிய நகரங்களை தாக்கி சுமார் 1,200 பேரை கொன்று 251 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, காசா மீது இஸ் ரேல் போர் தொடுத்தது.
இந்த நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கவும், அவர்கள் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை மீட்கவும் இஸ்ரேல் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பல கட்டங்களாகப் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்ட போதும், இன்னும் 50 பேர் வரை ஹமாஸ் பிடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் , காசாவை கைப்பற்றும் ராணுவத்தின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அதைச் செயல்படுத்த சுமார் 60 ஆயிரம் வீரர்களை அழைக்க அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகப் போரின் தீவிரம் மேலும் கூடுதலாகவுள்ளது.