உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நவீன் பட்நாயக், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
ஒடிசா முன்னாள் முதலமைச்சரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக்கிற்கு திடீரென நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது.
இதனால் புவனேஷ்வரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து நவீன் பட்நாயக் வீடு திரும்பினார். அப்போது சிகிச்சை அளித்த மருத்துவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.