கையடக்க கணினியை கேள்விபட்டிருப்போம்… கையடக்க ஏசியை கேள்வி பட்டிருப்போமா?… அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண பொறியாளர்கள் தான் இந்த அசத்தலான ஏசியை கண்டுபிடித்துள்ளனர்.
உலகம் முழுவதும் வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், அதில் இருந்து தப்பிக்க ஏ.சி. அத்தியாவசியமாக மாறிவிட்டது. ஆனால், ஏசிப் பயன்படுத்தினால் மின்கட்டணம் தாறுமாறாக எகிறி நிற்க, அதற்கு முடிவு கட்டவே கலிஃபோர்னியா பொறியாளர்கள் கையடக்க ஏசியை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
மின்கட்டணம் பெரிதளவில் குறைவதுடன், நினைக்கும் இடங்களுக்குக் கொண்டு செல்ல முடியும் என்பதால் வாடிக்கையாளர்களின் கவனம் கையடக்க ஏசியின் பக்கம் திரும்பியுள்ளது. பார்ப்பதற்கு மியூசிக் டிவைஸ் போலவே தோற்றம் கொண்ட இந்த ஏசி, மின்சாதன விற்பனை சந்தையில் சக்கை போடு போடும் என்பதில் சந்தேகமில்லை.