கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவரின் உடல், பாதி எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
வெங்கமேடு ரொட்டிக்கடை தெருவை சேர்ந்த ஜெயக்குமார், தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 17-ஆம் தேதி வெளியே சென்ற அவர் மாயமான நிலையில், காவல்நிலையத்தில் தந்தை ஆனந்த் புகார் அளித்தார்.
இந்நிலையில் வெங்கமேடு பகுதியில் உள்ள தண்டவாளம் அருகே பாதி எரிந்த நிலையில், ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார், உயிரிழந்தது ஜெயக்குமார் என்பதை உறுதி செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.