நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் நடத்திய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
எம்ஜிஆர் நகரை சேர்ந்த குமார், அங்குள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற கடனை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடன் தொகையை வசூலிக்க வந்த ஊழியர்கள் 4 பேர், குமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக ஊழியர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.