இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
வரலாற்று சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு சிறப்பான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழாவை ஒட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கோயிலில் திரண்டனர். கோவில் வசந்த மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.
பின்னர் ஆறுமுகப் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக உள்ளே வலம் வந்து தேரில் எழுந்தருளினார். அப்போது “அரோகரா” முழக்கத்துடன் கூடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.