எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. குறிப்பாக, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதையடுத்து மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலமாக விவாதமின்றி மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி ஆன்லைன் விளையாட்டு சேவையை வழங்கும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க மசோதா வழிவகை செய்கிறது.