விழுப்புரம் அருகே குடிசை வீட்டில் வாழ்ந்துவரும் மாணவி, நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கியுள்ளார்.
வானூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் மாணிக்கம் என்பவரின் மகள் ஷீலா. தனியார் பள்ளியில் பயின்ற இவர், கடந்தாண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 568 மதிப்பெண்கள் பெற்றார். சிறுவயதில் இருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு பயின்ற ஷீலா, நீட் தேர்வுக்கான சிறப்பு வகுப்பில் ஓராண்டு பயிற்சி பெற்றார்.
இந்நிலையில் இந்தாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 489 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த ஷீலாவிற்கு சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பயில வாய்ப்பு கிடைத்துள்ளது.
மழையில் ஒழுகும் கூரை வீட்டில் வசித்தபோதும் கடின உழைப்பால் தனது கனவை எட்டிப் பிடித்துள்ள ஷீலாவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அதேநேரம் விடுதியில் தங்கி பயில்வதற்கு போதிய வசதி இல்லாததால் தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என ஷீலாவும் அவரது குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.