ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குகிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் அரசு முறை பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யா சென்றுள்ளார். தொடர்ந்து அவர் மாஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் எண்ணெய் வாங்குவது சீனா என தெரிவித்தார். அதேபோல் இயற்கை எரிவாயுவை ஐரோப்பிய நாடுகளே அதிக அளவில் வாங்குவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த இரண்டையுமே இந்தியாவை விட பிற நாடுகளே அதிக அளவில் வாங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல் 2022 க்குப் பிறகு ரஷ்யாவுடன், இந்தியா அதிக அளவில் வர்த்தகம் புரியவில்லை என்றும் தெற்கில் உள்ள சில நாடுகளே அதிகளவில் வர்த்தகம் புரிவதாகவும் அவர் விளக்கமளித்தார். மேலும் அமெரிக்காவிலிருந்தும் இந்தியா எண்ணெய் வாங்குவதாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.