மதுரை பாரபத்தியில் தவெக மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் கேம்ப் லையன் பகுதியை சேர்ந்த ரித்திக்ரோஷன், என்பவர் கொரியர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். 18 வயது மதிக்கத்தக்க இவர், மதுரை பாரபத்தியில் நடைபெற்ற தவெக மாநாட்டில் பங்கேற்று விட்டு ஊர் திரும்பியுள்ளார். சமயநல்லூர் நெடுஞ்சாலை அருகே கார் சென்ற போது ரித்திக்ரோஷன் திடீரென மயங்கியதாக கூறப்படுகின்றது.
இதனைத்தொடர்ந்து சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரித்திக்ரோஷன் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து அவரது உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த தவெக தொண்டர் ஒருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளன.