எந்த பொறுப்பாக இருந்தாலும் பாஜகவின் தொண்டன் என்ற பொறுப்பை விட உயர்வான பொறுப்பு இல்லை என கூறியவர் இல கணேசன் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மறைந்த நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசனின் புகழஞ்சலி கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று அவர் பேசியதாவது :
தேசியக்கொடியோடு நாட்டுக்குச் சென்ற பெருமையோடு இல கணேசன் நம்மை விட்டு சென்றுள்ளார்.
மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இல கணேசன் வீட்டிற்கு சென்றபோது இல. கணேசன் என்னையும் அழைத்தார், அப்போது நான் அவரை சந்திக்க வரவில்லை என மறுத்தேன்.
என்னுடைய தர்மம் எனது மாநில முதலமைச்சரை வீட்டிற்கு அழைக்க வேண்டும் என்பது, உன்னுடைய தர்மம் அவரை சந்திக்க வேண்டாம் என்பது, சரியானது தான் உன் முடிவு என தெரிவித்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் குழந்தை போல இல கணேசன் இருந்தார் விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்த்த நிலையில் நம்மை விட்டு அவர் சென்று விட்டார்.
ஒற்றை மனிதனின் பெருந்தன்மைக்காக அனைத்து கட்சி தலைவர்களும் இங்கு வந்துள்ளனர்என அண்ணாமலை கூறினார்.